விபத்தில் சிக்கிய நடிகர் இமான் அண்ணாச்சி
சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு பலர் வருகிறார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்குவதற்காக சென்னைக்கு வந்த இடத்தில் பலர் கஷ்டப்படுகிறார்கள்.
இதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம். அதில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். 2006 ஆம் ஆண்டு வெளியான சென்னை காதல் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் சின்ன கேரக்டரில் நடித்த இமான் அண்ணாச்சி அதற்குப் பிறகு கோலங்கள் சீரியலில் அன்வர் என்ற கேரக்டரில் நடித்தார்.
அது போல சின்னத்திரையில் சன் டிவியில் குட்டீஸ் சுட்டீஸ், சொல்லுங்க அண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளில் இவர் செய்யும் அட்ராசிட்டி இவருக்கு என்று தனி ரசிகர்களை உருவாக்கியது.
இந்நிலையில் இமான் அண்ணாச்சியும் அவருடைய குடும்பத்தினரும் விபத்தில் சிக்கி இருக்கின்றனர் அது குறித்து இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது.
அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோது விபத்தில் சிக்கி இருக்கிறது. இதில் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த தகவலை இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்