பிரான்சில் விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து - 15 வயது மாணவி மரணம்

#Death #School #France #Accident #Bus
Prasu
1 month ago
பிரான்சில் விபத்துக்குள்ளான பாடசாலை பேருந்து - 15 வயது மாணவி மரணம்

பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். Eure-et-Loir மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 

இதில் 15 வயதுடைய மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் என மேலும் 20 பேர் காயமடைந்திருந்தனர்.

பேருந்தினைச் செலுத்திய சாரதி விபத்து இடம்பெற்றபோது கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய குறித்த நபருக்கு பேருந்தைச் செலுத்த அனுமதிக்கும் ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!