திருகோணமலையில் இருந்து சென்ற வேன் பேருந்துடன் மோதி விபத்து - இருவர் பலி!

#SriLanka #Trincomalee #Accident
Dhushanthini K
2 months ago
திருகோணமலையில் இருந்து சென்ற வேன் பேருந்துடன் மோதி விபத்து - இருவர் பலி!

திருகோணமலை - ஹம்பரண வீதியில் இன்று (1) காலை பேருந்தும் வேனும் மோதி  விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வாங்குவ அருகே திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், திருகோணமலையிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் வேனின் ஓட்டுநர் மற்றும் பேருந்தில் இருந்த ஒரு பெண் பயணி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கிண்ணியா 02 பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும்,  மற்றையவர் ஹிக்கடுவையைச் சேர்ந்த 66 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்கள் ஹபரண மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

பேருந்து மற்றும் வேனில் பயணித்த சுமார் 35 பேர் காயமடைந்து ஹபரண மற்றும் தம்புள்ளை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!