இரட்டை பெண் குழந்தைகளுக்கு தந்தையான கவிஞர் சினேகன்
தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாது ஹிட் பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். பிக் பாஸ் முன் இவர் எழுதிய பாடல்கள் குறித்து யாருக்கும் பெரிதாக தெரியாது.
சினேகன் 2021ல் நடிகை கன்னிகா ரவியை காதல் திருமணம் செய்து கொண்டார். கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் கன்னிகாவுக்கு பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது. அந்த மகிழ்ச்சியான செய்தியை கன்னிகா ஒரு அழகிய பதிவுடன் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "தாயே எந்தன் மகளாகவும்.. மகளே எந்தன் தாயாகவும்.. இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள். இதயமும், மனமும் மகிழ்ச்சியில் நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது.
உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள்." என பதிவிட்டுள்ளார். தற்போது, இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்