ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்
ஜெர்மனி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர்க்கு வயது 81.
ஹோர்ஸ்ட் கோஹ்லர் ஜெர்மனியின் அதிபராக 2004 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2010ம் ஆண்டு மே 31ந்தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.
ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஜெர்மன் ராணுவத்தினரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதால் கோஹ்லர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது.
அந்த பேட்டியில், "ஜெர்மனியின் ஏற்றுமதி வர்த்தகத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில் ஜெர்மனியின் ராணுவத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நமது நாட்டின் நலன்களை பாதுகாக்க முடியும்" என்று கோஹ்லர் கூறியிருந்தார்.
வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, ஆப்பிரிக்க மக்களின் தேவைகள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்க முயன்றதற்காக கோஹ்லர் பாராட்டைப் பெற்றார்.
இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, "யூத படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு நான் வெட்கத்துடனும், பணிவுடனும் தலை வணங்குகிறேன்" என்று கோஹ்லர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்