விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் திருத்தப்படும் - வர்த்தக அமைச்சர் உறுதி!

#SriLanka #Fuel
Thamilini
1 year ago
விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் திருத்தப்படும்  - வர்த்தக அமைச்சர் உறுதி!

விலைச் சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும், விலைச் சூத்திரத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறுகிறார். 

அனுராதபுரத்தில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தொழிற்சாலைகளுக்கான மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்பட்டது. இது நுகர்வோருக்கும் நிவாரணம் அளிக்கிறது. 

எனவே, ஒரு அரசாங்கமாக, மக்களுக்கு நிவாரணம் வழங்க அனைத்து துறைகளிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். 

நிறுவனங்களையும் மக்களையும் பாதுகாத்து முன்னேறிச் செல்வதன் மூலம் நாட்டை வளமான நாடாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. "எனத் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4