பிரபல தொடரில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா
நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் சின்னதிரை நடிகையுமான ஜோவிதா லிவிங்ஸ்டன், மெளனம் பேசியதே தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெளனம் பேசியதே தொடரில் நடித்துவந்த அவர், தற்போது அத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் மெளனம் பேசியதே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அருவி மற்றும் பூவே உனக்காக ஆகிய இரு தொடர்களைத் தொடர்ந்து தற்போது மெளனம் பேசியதே தொடரில் ஜோவிதா நடித்துவருகிறார்.
இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் ஜோவிதா பதிவிட்டுள்ளதாவது, ''மெளனம் பேசியதே தொடரில் எனது கதாபாத்திரம் மிகுந்த சுயநலம் கொண்டதாகவும், மன அழுத்தம் உடையதாகவும் உள்ளது.
இதில் நடிப்பது எனக்கு நிறைவாக இல்லை. எனது நம்பிக்கை மற்றும் கலாசாரத்துக்கு எதிரானதாக உள்ளது.
சில மாதங்களாக ஓய்வின்றி நடிப்பதைப்போன்று உள்ளது. இது எனக்கு கடினமான சூழல். தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக இல்லாததால், இத்தொடரில் இருந்து விலகுகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்