அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்கள் : பஞ்சாப்பில் தரையிறங்கிய முதல் விமானம்!
அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை நாடு கடத்துவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவின்படி, சம்பந்தப்பட்ட இந்தியர்கள் குழு அமெரிக்க இராணுவ விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் வெளிநாட்டினரின் பட்டியலில் 18,000 இந்தியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்