தலைசுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் விலை : கிலோ 1400 ரூபாவிற்கு விற்பனை!

#SriLanka #prices #Food #Vegetable
Thamilini
1 year ago
தலைசுற்ற வைக்கும் பச்சை மிளகாயின் விலை : கிலோ 1400 ரூபாவிற்கு விற்பனை!

மரக்கறிகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில் பச்சை மிளகாயின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சந்தையில் காய்கறிகளின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அந்தவகையில் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 1200 முதல் 1400 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாயின் விலை 1000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை மிளகாய் விலை அதிகரிப்பால், மிளகாய் விற்பனையும் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும், இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4