SLvsAUS Test - முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று இடம்பெற்று வருகிறது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
அதேநேரம் இன்றைய போட்டியுடன் இலங்கை அணியின் வீரர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்சில் விளையாடி கொண்டிருக்கும் இலங்கை அணி 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் சந்திமால் 74 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் 3 விக்கெட்களை பெற்றுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



