இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த துருக்கி

#SriLanka #Turkey #Ambassador
Prasu
1 year ago
இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்த துருக்கி

துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut), இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். இந்தக் கலந்துரையாடலில், இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து சபாநாயகரும் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

பாராளுமன்ற இராஜதந்திரம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

பாராளுமன்றத்திற்கான தனது விஜயத்தின் ஒரு பகுதியாக, துருக்கித் தூதுவர் செமி லுட்ஃபு துர்குட், பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களையும் சந்தித்தார். 

இதன்போது பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் பங்களிப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய துருக்கித் தூதுவர், இலங்கைக்கான தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான துருக்கியின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4