வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 07 (February 07)

#people #history #Lanka4
Prasu
1 year ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 07 (February 07)

கிரிகோரியன் ஆண்டின் 38 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 327 (நெட்டாண்டுகளில் 328) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார்.[1]
  • 1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார்.[2]
  • 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின.
  • 1812 – அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
  • 1819 – சேர் இசுடாம்போர்டு இராஃபிள்சு சிங்கப்பூரை வில்லியம் பார்க்கூகார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்.
  • 1845 – இலங்கை அரச ஆசியர் சமூகத்தின் இலங்கைக் கிளை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.[3]
  • 1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியசு என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
  • 1904 – அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம், பால்ட்டிமோரில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.[4]
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அன்சியோ நகரில், செருமனியப் படைகள் கூட்டுப் படைகளின் சிங்கிள் நடவடிக்கைக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தன.
  • 1951 – கொரியப் போர்: 700 இற்கும் அதிகமான கம்யூனிச ஆதரவாளர்கள் தென்கொரியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, இறக்குமதித் தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தது.
  • 1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் உயிரிழந்தனர்.
  • 1967 – ஆத்திரேலியா, தாசுமேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் உயிரிழந்தனர்.
  • 1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
  • 1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரெனடா விடுதலை பெற்றது.
  • 1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
  • 1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
  • 1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அரசுத்தலைவர் ஜீன்-குளோட் டுவாலியர் நாட்டில் இருந்து வெளியேறினார்.
  • 1990 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு கட்சியின் தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
  • 1991 – எயிட்டியில் முதல் முறையாக மக்களாட்சி முறை மூலம் தெரிவான அரசுத்தலைவர் சான்-பெர்ட்ரண்ட் அரிசுடைடு பதவியேற்றார்.
  • 1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் தெருவில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
  • 1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • 1999 – உலகத் தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
  • 2005 – விடுதலைப் புலிகளின் மட்டு - அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட 4 விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
  • 2009 – ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரும் இயற்கை அனர்த்தமான விக்டோரியா மாநில காட்டுத்தீயினால் 173 பேர் உயிரிழந்தனர்.
  • 2012 – மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார்.
  • 2013 – அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலம் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத்தை அமுல் படுத்தியது.

பிறப்புகள்

  • 1478 – தாமஸ் மோர், ஐக்கிய இராச்சியத்தின் உயராட்சித் தலைவர் (இ. 1535)
  • 1766 – பிரடெரிக் நோர்த், பிரித்தானிய குடியேற்றவாத நிருவாகி, இலங்கையின் 1வது தேசாதிபதி (இ. 1827)
  • 1812 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1870)
  • 1824 – வில்லியம் ஹக்கின்ஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1910)
  • 1850 – ஜான் பிரவுன் பிரான்சிஸ் எர்ரெசாஃப், அமெரிக்க வேதியலாளர் (இ. 1932)
  • 1864 – சர் பி. எஸ். சிவசுவாமி, இந்திய வழக்கறிஞர், நிருவாகி, அரசியல்வாதி (இ. 1946)
  • 1870 – ஆல்பிரெட் ஆட்லர், ஆசுத்திரியயைசுக்காட்லாந்து உளவியலாளர் (பி. 1937)
  • 1877 – ஜி. எச். ஹார்டி, ஆங்கிலேயக் கணிதவியலாளர் (இ. 1947)
  • 1885 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1951)
  • 1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
  • 1933 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (இ. 2015)
  • 1934 – ஆ. மாதவன், கேரளத் தமிழ் எழுத்தாளர் (இ. 2021)
  • 1940 – டோனி டேன் கெங் யம், சிங்கப்பூரின் 7வது குடியரசுத் தலைவர்
  • 1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கை அரசியல்வாதி (இ. 2014)
  • 1965 – கிரிசு ரொக், அமெரிக்க நடிகர், இயக்குநர்
  • 1978 – ஆஷ்டன் குட்சர், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர்
  • 1979 – தவக்குல் கர்மான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற யேமன் ஊடகவியலாளர்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4