2025ம் ஆண்டு மிதுன ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

#Astrology #Rasipalan
Prasu
4 hours ago
2025ம் ஆண்டு மிதுன ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

மிதுன ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 10ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் நீங்கள் வெற்றி காண்பீர்கள் என்றாலும் கடின உழைப்பு அவசியம். அதன் மூலம் நீங்கள் நேர்மறை பலனைக் காணலாம். உங்கள் இலக்குகளை நோக்கி பயணித்து வெற்றி காணலாம்.

உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனியின் தாக்கம் காரணமாக உங்களுக்கு பொறுப்புணர்ச்சி அதிகரிக்கலாம். பயனுள்ள காரியங்களைச் செய்வீர்கள்.

உத்தியோகம் :
உத்தியோகத்தை பொறுத்தவரை முன்னேற்றங்கள் இருந்தாலும் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரும். எனவே உங்கள் கடின உழைப்பு அவசியம் தேவை. அப்பொழுது தான் பனியில உங்கள் இலக்குகளை நீங்கள் அடைய முடியும். சனி பகவான் நீதிபதி போல செயல்படுபவர்.

எனவே உங்கள் உத்தியோகம் மற்றும் தொழில் முன்னேறத்திற்கு  உங்கள் செயலில் நீதியும் நேர்மையும் இருக்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் பணிகள் அதிகமாக காணப்படும்.  

சோதனைகள் இருந்தாலும் உங்கள் திறமையை பயன்படுத்தி கடினமாக உழைப்பதன் மூலம் உங்கள் முயற்சிகளுக்கான பாராட்டும் அங்கீகாரமும் பெறுவீர்கள்.

காதல் / குடும்ப உறவு :
திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை கண்டு கொள்ளலாம். திருமணம் சார்ந்த உங்கள் முயற்சிகள் கைகூடும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் மற்றும் தாமதங்கள் விலகும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

தாயுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனவே தாயுடன் சுமுக உறவை பராமரிப்பது கடினமாக இருக்கலாம். எனவே பொறுமையாக செயல்பட வேண்டும்.

இந்த சூழ்நிலையை சமாளித்து சிறந்த வலுவான உறவு காண அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மேலும் எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாகவே கூறுவது நல்லது சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும்.

திருமண வாழ்க்கை :-
திருமணமான தம்பதிகளுக்கு இடையே உறவு சுமுகமாக இருக்கும். உறவில் நெருக்கம் மற்றும் பிணைப்பு  இருக்கும். சில தற்காலிக பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும்  பரஸ்பரம் ஆதரவு அளிப்பதும் ஒருவரை ஒருவர் கனிவுடன் நடத்துவதும்  சவால்கள் மற்றும் மோதல்களை எளிதாக்கும்.

அனுசரித்து நடந்து கொள்வதும் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.  பரஸ்பர புரிந்துணர்வும்  விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும் உங்கள் துணையுடனான உறவை வலுவாக்கும்.

நிதிநிலை :-
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் உங்கள் நிதிநிலையில் ஏற்றம் இருக்கும் என்றாலும் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். வரவு செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். நிதி குறித்த அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

கடன் வாங்குவதை தவிர்க்கவும். பண விஷயத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறவும்.பணத்தை முதலீடு செய்வதற்கு முன் ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.

முதலீடு மட்டும் இன்றி பணம் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. கவனமாக செயல்படுவதன் மூலம் நிதிநிலையில் முன்னேற்றம் காணலாம்.

மாணவர்கள் :-
இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். மாணவர்களின் அறிவுத் திறன் மேம்படும். படைப்பாற்றல் வெளிப்படும்.  நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்.

அதற்கான பலனையும் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் பெறுவீர்கள். வெற்றியின் உச்சத்தை அடைவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள், பின்னடைவுகள் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள், மேலும் உங்கள் திறமைகளை அடுத்த நிலைக்கு உயர்த்த உங்கள் திறன்களை நம்புங்கள்.

இது அற்புதமான வாய்ப்புகள் நிறைந்த பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதை. சிறப்புப் படிப்புகளுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

ஆரோக்கியம் :-
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். எனவே  ஆரோக்கியம் மிகவும்  முக்கியம். இந்த காலக்கட்டத்தில்உங்கள் ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் சாத்தியம்.

எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு புத்துணர்ச்சி கிட்டும். மன அழுத்தம் விலகும். ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்.

வயதானவர்களுக்கு உடல் நிலை சீராக நேரம் எடுக்கலாம். குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தங்களை கவனித்துக் கொள்வது அவசியம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். எனவே உங்கள் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!