ரிஷப ராசியினர் முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள் - ராசிபலன்
மேஷம்:
அசுவினி: நினைப்பது நிறைவேறும்
நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் பயணம் லாபம்
தரும். முயற்சி வெற்றியாகும்.பரணி: அலுவலகப் பணியில் வேலைகளுக்கு
மதிப்புண்டாகும். வழக்கமான வேலைகளில் லாபம் கூடும்.கார்த்திகை 1: உடல்நிலை
சீராகும். உறவு வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர். அவற்றை சாதுர்யமாக
சமாளிப்பீர். மனம் தெளிவடையும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4:
முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம்
காண்பீர். அலுவல நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும்.ரோகிணி: வியாபாரத்
தடை விலகும். குருவின் பார்வைகளால் எண்ணம் ஈடேறும். முயற்சிக்கேற்ற லாபம்
காண்பீர்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள்
விலகிச் செல்வர். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வார்த்தைகளில்
கவனம் தேவை. நிதானமாக செயல்படுவது நல்லது.திருவாதிரை: மற்றவர் நலனில்
அக்கறை கொள்வீர். உங்களை விமர்சித்தவர்களும் பாராட்டுவார்கள்.செல்வாக்கு
உயரும் நாள்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தினர்
விருப்பங்களை நிறைவேற்றுவீர். வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம்:
புனர்பூசம்
4: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட
நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்னை
முடிவிற்கு வரும்.பூசம்: லாப குருவால் வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி
நீங்கும். நீங்கள் நினைத்தபடியே உங்கள் வேலைகள் நடத்துவீர்கள்.ஆயில்யம்:
மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவீர்கள். எடுத்த வேலைகளில்
லாபத்தைக் காண முடியும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.
சிம்மம்:
மகம்:
வரவு செலவில் கவனம் தேவை. பழைய பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு
உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.பூரம்: உங்கள் ராசிநாதனின்
சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். அலைச்சல்
ஏற்பட்டாலும் அதில் லாபம் இருக்கும்.உத்திரம் 1: துணையுடன் ஏற்பட்ட பிரச்னை
விலகும். குடும்பத்தின் மீது அக்கறை உண்டாகும். எதிர்பார்த்த வரவு
தள்ளிப்போகும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: லாபமான நாள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். முயற்சி வெற்றியாகும். நிதி
நிலை உயரும். பழைய கடன்களை அடைப்பீர்.அஸ்தம்: போட்டிகளை சமாளித்து
நினைத்ததை சாதிப்பீர். குரு பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால்
செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: வர வேண்டிய பணம் வரும். செயல்களில்
இருந்த தடை விலகும். நண்பர்களால் வேலை நடக்கும். வியாபாரம்
முன்னேற்றமடையும்.
துலாம்:
சித்திரை 3,4: கவனமாக செயல்பட
வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உழைப்பிற்கேற்ற
லாபம் காண்பீர்.சுவாதி: உங்கள் முயற்சியால் தேவை நிறைவேறும். வருமானம்
அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.விசாகம் 1,2,3:
உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும்
விலகும். நீங்கள் நினைத்ததை அடைவீர்.
விருச்சிகம்:
விசாகம் 4:
தடை விலகும் நாள். ராசிக்கு குருவின் பார்வை உண்டாவதால் நீங்கள்
மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உங்கள் செயல் சாதகமாகும்.அனுஷம்:
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு
வரும். வருமானம் உயரும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.கேட்டை: நீங்கள்
எதிர்பார்த்தவற்றை இன்று அடைவீர். வரவேண்டிய பணம் வரும். சங்கடம் குறையும்.
உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.
தனுசு:
மூலம்:
நினைப்பது நிறைவேறும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். புதிய
முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.பூராடம்: கனவு நனவாகும்.
எதிர்பார்த்த தகவல் வரும். சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளியூர் பயணத்தை
தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சி வேண்டாம்.உத்திராடம் 1: தேவையற்ற
குழப்பம் உண்டாகும். செயல்களில் சங்கடம் தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர்.
இயந்திரப்பணிகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: நன்மையான நாள் விழிப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர். மனக்
குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும்.திருவோணம்:
நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும்.
வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.அவிட்டம் 1,2: நேற்று
எதிர்பார்த்திருந்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி
நீங்கும். நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: வருவாயால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர்கள்
விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.சதயம்:
திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உடல்நிலையில்
சிறு பாதிப்பு ஏற்பட்டு மறையும்.பூரட்டாதி 1,2,3: உங்கள் விருப்பம்
நிறைவேறும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.
வழக்கு சாதகமாகும்.
மீனம்:
பூரட்டாதி 4: வருவாய் அதிகரிக்கும்
நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.
மனக்குழப்பம் தீரும்.உத்திரட்டாதி: உறவினர் வழியில் ஏற்பட்ட பிரச்னை
விலகும். சுயதொழில் புரிவோருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்
ஏற்படும். ரேவதி: திட்டமிட்ட வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
நண்பர்களால் லாபம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்