காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 31 பேர் மரணம்
காசாவில் கடந்த அக்டோபர் 10ல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 6 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர்.
காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரில் உள்ள காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )