மீன் வருவல் - செய்முறை விளக்கம் இதோ!
![மீன் வருவல் - செய்முறை விளக்கம் இதோ!](https://ms.lanka4.com/images/thumb/1739338184.jpg)
தேவையான பொருள்கள்:
1. வஞ்சிர மீன் துண்டுகள்
2. இஞ்சி
3. முட்டை
4. சோயா சாஸ்
5. எண்ணெய்
6. சோள மாவு
7. உப்பு
8. மிளகுத் தூள்
செய்முறை:
முட்டையை நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி விழுது, சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவை அனைத்தையும் மீன் துண்டுகளின் மீது தடவவும். தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றிச் சூடு பண்ணவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் உடனுக்குடன் மீன் துண்டுகளை அடித்த முட்டையில் நனைத்து சோள மாவில் நன்கு புரட்டி வறுத்து எடுக்கவும். (மீன் பொன்னிறத்தில் வரும் வரையில் தீய விடாமல் வறுக்கவும்) 5. இதோ சுவையான மீன் வறுவல் தயார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)