பிரான்சில் குரங்கு அம்மை நோயால் 10 பேர் பாதிப்பு
![பிரான்சில் குரங்கு அம்மை நோயால் 10 பேர் பாதிப்பு](https://ms.lanka4.com/images/thumb/1739348584.jpg)
பிரான்சில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 10 குரங்கம்மை தொற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இல் து பிரான்ஸ் மாகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு சுகாதாரத்துறை இன்று பெப்ரவரி 10, திங்கட்கிழமை வெளியிட்ட தகவல்களின் படி, "clade 1b" எனும் குரங்கம்மையின் திரிபு தொற்று, ஜனவரி 1 முதல் பெப்ரவரி 4 ஆம் திகதிவரையான நாட்களில் 24 வயது முதல் 44 வயது வரையுள்ள 10 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் எட்டுப்பேர் இல்-து-பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தொற்று பரவலுக்குரிய காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)