களுத்துறையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர்!

#SriLanka #kalutara #crocodile
Thamilini
1 year ago
களுத்துறையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர்!

களுத்துறை பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு நபரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. நேற்று (12) காலை களுத்துறை வடக்கு காவல் நிலையத்தில், பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த ஒருவரை முதலை பிடித்து இழுப்பதைக் கண்டதாகக் கூறி ஒருவர் புகார் அளித்துள்ளார். 

 அதன்படி, போலீசார் நடத்திய சோதனையின் போது, ​​முதலை உடலைப் பறித்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு சூட்கேஸில் கதிர்காமத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரின் அடையாள அட்டையின் புகைப்படம் மற்றும் இரண்டு வங்கிக் கணக்குப் புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 சம்பவம் குறித்து கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4