ட்ரம்பின் வரி விதிப்பால் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை எதிர்கொள்ளும் பிரித்தானியா

#England #Trump #Tax
Prasu
1 year ago
ட்ரம்பின் வரி விதிப்பால் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை எதிர்கொள்ளும் பிரித்தானியா

மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகள் மீது தனித்தனியாக வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சுமார் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை பிரித்தானியா எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு VAT எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகளுக்கு தனித்தனியாக வரி வசூலிக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பொதுவாக 21 சதவிகித வரி வசூலிக்கப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது. 

இது ஒவ்வொரு நாடுக்கும் தனித்தனியாக செயல்படுத்தப்பட இருப்பதால், பிரித்தானியாவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது பிரித்தானியா சராசரியாக 20 சதவிகிதம் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலித்து வருகிறது. 

ஆனால் ட்ரம்ப் தெரிவிக்கையில், VAT என்பதை தாம் வரி விதிப்பாகவே கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் வரி விதிப்புகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தில் 0.4 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அது 24 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

எந்த நாடும் புகார் தெரிவிக்காத வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய வரியை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரிட்டிஷ் வர்த்தக சபையின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் William Bain தெரிவிக்கையில்,

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4