முதியவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#SriLanka #Elder #Aswesuma
Thamilini
1 year ago
முதியவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

70 வயதினைப் பூர்த்தியடைந்த முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனகிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

 தேவைப்படும் குடும்பங்களில் உள்ள பெரியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் பெரியவர்களுக்கு மட்டுமே தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை இம்மாதம் 20 ஆம் திகதி முதல் தபால் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4