காதலியை தனிமையில் சந்தித்த காதலன் பரிதாபமாக பலி!

#SriLanka #Crime
Thamilini
1 year ago
காதலியை தனிமையில் சந்தித்த காதலன் பரிதாபமாக பலி!

பொத்துப்பிட்டிய பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தகாத உறவின் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையே இவ்வாறு கொலையில் முடிந்துள்ளது. 

உயிரிழந்தவர் 35 வயதானவர் எனக் கூறப்படுகிறது. குற்றம் நடந்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த யுதவி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். 

இதன்போது அவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நிலையில் காதலர் தினத்தன்று இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். 

அவ்விடத்திற்கு வருகை தந்த பெண்ணின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், குறித்த பெண்ணின் காதலனை தடியால் தாக்கியுள்ளார். 

இதன்போது படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4