2025ம் ஆண்டு மகர ராசியினருக்கான சனி பெயர்ச்சி பொதுப்பலன்

மகர ராசிக்காரர்களுக்கு மீன ராசியில்
சனிப்பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து 3ம் வீட்டில் நடக்கும். இந்த
பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை
மீனத்தில் இருக்கிறார்.
நீங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து
விடுபடுகிறீர்கள் என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயம். சவால்கள் மற்றும்
தடைகள் இருந்த காலம் முடிவுக்கு வருகிறது எனலாம்.
இனி உங்களை
ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி
காணலாம். உங்கள் வாழ்வில் பல்வேறு அம்சங்களில் நீங்கள் வளர்ச்சி மற்றும்
முன்னேற்றம் காணலாம். வரவிருக்கும் நல்ல காலத்தை வரவேற்கத் தயாராகுங்கள்.
உத்தியோகம் :-
உத்தியோகத்தைப்
பொறுத்தவரை வரவேற்கத்தக்க பெயர்ச்சியாக இந்த பெயர்ச்சி அமையும். உங்கள்
உத்தியோகம் மற்றும் தொழிலில் நீங்கள் முன்னேற்றமும் வளர்ச்சியும்
காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். நீங்கள்
ஆக்கப்பூர்வமாகவும் சிந்தித்தும் செயல்படுவீர்கள்.
சக பணியாளர்கள்
மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அவர்கள் உங்கள்
முன்னேற்றத்திற்கு துணை புரிவார்கள். உங்கள் முயற்சிகளை ஆதரிக்கலாம்.
சில
சாவல்களை நீங்கள் சந்திக்க நேரும் என்றாலும் அவற்றை நீங்கள் தைரியத்துடன்
எதிர்கொள்வீர்கள். உங்கள் தகவல் தொடர்புத் திறன் மேம்படும்.உங்கள் கடின
உழைப்பு மூலம் பணியிடத்தில் மதிப்பு பெறுவீர்கள். நீங்கள் எண்ணியபடி
தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணப்படலாம்.
காதல் / குடும்ப உறவு :
உறவில்
இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையலாம். புரிந்துணர்வு
அதிகரிக்கலாம். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சகோதர
சகோதரிகளுடன் நல்லுறவு காணப்படும். என்றாலும் பிள்ளைகளுடன் கருத்து
வேறுபாடுகள் எழலாம்.உங்கள் கருத்துக்கு முரண்பட்டு அவர்கள் நடந்து
கொள்ளலாம். ஒளிவு மறைவற்ற பேச்சு உறவில் இடைவெளியைக் குறைக்கும்.
ஒற்றையர்கள் தங்களுக்கு ஏற்ற ஆத்ம துணையை இந்த காலக்கட்டத்தில் எளிதில்
கண்டுபிடிக்கலாம்.
திருமண வாழ்க்கை :
திருமணத்திற்காகக்
காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமான பலனை அளிக்கும். உங்கள்
விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களுக்கேற்ற துணை
கிடைப்பதன் மூலம் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். திருமணமான
தம்பதிகள் வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும்.
அன்னியோன்யம்
அதிகரிக்கும். என்றாலும் உறவு என்றால் சில சவால்களும் சோதனைகளும் எழத் தான்
தான் செய்கின்றன. எனவே உறவில் அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள
வேண்டியது அவசியம்.
நிதிநிலை :-
இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில்
உங்கள் நிதிநிலை சீராக இருக்கலாம். பண நெருக்கடிகளில் இருந்து நீங்கள்
விடுபடலாம். பணபுழக்கம் அதிகமாக இருக்கலாம். இது உங்களுக்கு சற்று ஆறுதலை
அளிக்கலாம். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
பாதுகாப்பான
நிதிநிலை இருக்கலாம். முதலீடு செய்யும் எண்ணம் உங்கள் மனதில் தோன்றலாம்.
நிதிநிலையைப் பொறுத்தவரை உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கலாம்.
இலாபத்தை
ஈர்க்கக்கூடிய பல்வேறு முதலீட்டுத் திட்டங்களைத் தேடுவதற்கும் இந்த நேரம்
சிறந்ததாகத் தோன்றுகிறது. பட்ஜெட்டை உருவாக்கி, உங்கள் செலவினங்களைக்
கண்காணிக்க வேண்டியது அவசியம். இது உங்கள் எதிர்கால நிதி மேம்பாட்டிற்கான
யதார்த்தமான இலக்குகளை அமைக்க உதவும்.
மாணவர்கள் :-
இந்த
காலக்கட்டத்தில் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். கல்வியில் பிரகாசிப்பார்கள். சிறப்பாக
தேர்வுகளை எழுதி வெற்றி பெறும் வகையில் உங்கள் திறன் மேம்படலாம். சிலர்
ஆராய்ச்சி படிப்பு துறையில் ஈடுபடலாம்.
அதில் நீங்கள் வெற்றியும்
காணலாம். தீவிர கவனம் மற்றும் அர்ப்பணிப்பு உங்கள் கல்வியில் புதிய
உயரத்திற்கு உங்களைத் இட்டுச் செல்லும்.
வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் கனவுகள் நனவாகலாம்! இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம்.
வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்புகள் இருக்கலாம். மருத்துவத் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நீட் போன்ற சவாலான தேர்வுகளை சமாளிக்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும், மேலும் முதல் முயற்சியிலேயே வெற்றியை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
ஆரோக்கியம் :-
மகர ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கலாம். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. நீங்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் செயல்படுவீர்கள்.இது வரை நீங்கள் சந்தித்து வந்த உடல் நலக் கோளாறுகளில் இருந்து நீங்கள் மீண்டு வரலாம்.
தியானம் மற்றும் யோகா உங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். உங்கள நோய் எதிர்ப்பு திறன் கூடும். நாள்பட்ட நோய்கள் குணமாகலாம். நேர்மறையான நிலையை பராமரிக்க, உங்கள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க நினைவில் கொள்ளுங்கள்.
அதிக சிந்தனை மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளைத் தவிர்க்கவும். சிறிய செரிமான பிரச்சனைகள் எழலாம் என்றாலும், அவை குறுகிய கால மற்றும் எளிதில் சமாளிக்கக்கூடியதாக இருக்கும். பெரிய அளவில் உடல் உபாதைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



