அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

#SriLanka #Police #GunShoot
Thamilini
1 year ago
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு  சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

அம்பலாங்கொடை காவல் பிரிவில் காலி-கொழும்பு பிரதான சாலையில் உள்ள உரவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் குறித்த இளைஞர் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெல்லேஜ் சமத் ஹர்ஷக பாதும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கண்டுப்பிடிக்க உதவுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேற்படி இளைஞர் பற்றிய தகவல் தெரிந்தால் கீழ் காணும் இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

தலைமையக தலைமை காவல் ஆய்வாளர் அம்பலாங்கொடை:- 071 - 8591484 

 எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு:- 091-2291095

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4