பிரான்ஸ் உணவகங்களில் அமலாகும் புதிய சட்டம்
#France
#Food
Prasu
1 month ago

பிரான்சில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளுக்கு புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் குறித்த சகல விபரங்களையும் காட்சிப்படுத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி எந்த நாட்டில் இருந்து வருகிறது. அது வெட்டப்பட்ட திகதி, வெட்டியவரின் பெயர் போன்றவற்றை காட்சிப்படுத்தவேண்டும்.
இந்த சட்டம் முன்னதாக மாட்டிறைச்சிகளுக்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது மாட்டிறைச்சி, பன்றி, ஆடு, கோழி, வாத்து போன்ற சகலவித இறைச்சிகளுக்கும் பொருந்தும்.
இதனை மீறுவோருக்கும் குற்றப்பணமாக €1,500 இல் இருந்து €3,000 வரை அறவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



