நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம்: சிக்கினார் துப்பாக்கிதாரி

#SriLanka #GunShoot
Mayoorikka
1 year ago
நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகம்: சிக்கினார் துப்பாக்கிதாரி

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

 துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்த பிரதி அமைச்சர், அங்கு இருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். என்று குறிப்பிட்டார். 

 எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிதாரி பயன்படுத்திய துப்பாக்கி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள் கடுமையான பாதுகாப்பை மேற்கொண்டு திடீர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4