தொழில்துறையை ஆதரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் - வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!

#SriLanka #budget #AnuraKumaraDissanayake
Thamilini
1 year ago
தொழில்துறையை ஆதரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்  - வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து!

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் இன்று (19) நடைபெற்ற "வரவு செலவுத் திட்டத்திற்குப் பிந்தைய உரையாடல் 2025" நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், திவாலான ஒரு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உலகின் பல நாடுகள் ஒரு தசாப்தம் எடுத்தாலும், இலங்கை அதிலிருந்து மீள்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான நேரமே ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தொழில்துறையை ஆதரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் கூறினார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4