நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவவின் பின்னணி!

#SriLanka #Court #Kanemulla Sanjeeva
Thamilini
1 year ago
நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவவின் பின்னணி!

புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தான் இலங்கையில் பெரும்பாலான நாளேடுகள், மற்றும் ஊடகங்களில் பிரதான தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. 

படுகொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்ஜீவ பாதாள உலககுழு உறுப்பினர் என்பதும் கொலை, கொள்ளை,கடத்தல் மற்றும் கப்பம் கோறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் அவர் தொடர்பு பட்டுள்ளதும் அனைவரும் அறிந்த விடயமே. 

இவர் பற்றி மேலும் சில தகவல்களும் தற்போது கசிந்துள்ளன. 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயட்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. 

திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் இவர் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த அவர், முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.

 ஆனால் சமிந்தவின் தம்பி ருவன் சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உற்பட்ட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர்.

ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார்.

 பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து கொழும்பை கைவிட்டு விட்டு கம்பஹா பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். 

இதன்போது அங்கே அவருக்கு தடையாக இருந்த ஒஸ்மான் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்து துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளார். இவ்வாறாக 30 இற்கும் மேற்பட்ட கொலை குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்கொண்டுள்ளார். 


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4