சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி

#Newzealand #Pakistan #Cricket
Prasu
1 day ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி

8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது. 

கராச்சி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் ரன்கள் குவித்தது. 

இதனைத்தொடர்ந்து 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சார்பில் சாத் ஷகீல் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் களமிறங்கினர்.

அடுத்ததாக பாபர் அசாமுடன், சல்மான் ஆஹா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த சல்மான் ஆஹா 42 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய தயாப் தாஹிர் 1 ரன்னில் வெளியேறினார். 

மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் தனது அரை சதத்தை பதிவு செய்தநிலையில், 64 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முடிவில் பாகிஸ்தான் அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!