வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 20 (February 20)

#people #history #Lanka4
Prasu
1 year ago
வரலாற்றில் இன்று உலகில் என்னவெல்லாம் நடந்தது? பெப்ரவரி 20 (February 20)

கிரிகோரியன் ஆண்டின் 51 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 314 (நெட்டாண்டுகளில் 315) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.
  • 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
  • 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.[1]
  • 1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
  • 1810 – பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.
  • 1818 – இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.[2]
  • 1835 – சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
  • 1846 – தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
  • 1865 – உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1877 – சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.
  • 1933 – நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.
  • 1935 – அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.
  • 1946 – இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.[3]
  • 1962 – மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
  • 1965 – அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
  • 1979 – நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.
  • 1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.
  • 1987 – அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
  • 1988 – நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.
  • 1991 – அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
  • 2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
  • 2009 – இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
  • 2010 – போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.
  • 2015 – சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்

  • 1844 – லுட்விக் போல்ட்ஸ்மான், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (இ. 1906)
  • 1876 – கா. நமச்சிவாய முதலியார், தமிழகத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1936)
  • 1878 – சி. கே. சுப்பிரமணிய முதலியார், தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1961)
  • 1901 – பொபிலி அரசர், சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சர் (இ. 1978)
  • 1923 – ஹெலன் மர்ரே பிரீ, அமெரிக்க வேதியியலாளர் (இ. 2021)
  • 1925 – கிரிஜா பிரசாத் கொய்ராலா, நேபாளப் பிரதமர் (இ. 2010)
  • 1941 – லிம் கிட் சியாங், மலேசிய அரசியல்வாதி
  • 1944 – விஜய நிர்மலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர் (இ. 2019)
  • 1945 – ஜியார்ஜ் ஸ்மூட், அமெரிக்க விண்ணியல் அறிஞர்
  • 1948 – கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளர்
  • 1951 – கார்டன் பிரவுன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
  • 1967 – கர்ட் கோபேன், அமெரிக்கப் பாடகர் (இ. 1994)
  • 1986 – கலையரசன், தமிழ்த் திரைப்பட நடிகர்
  • 1987 – மைல்ஸ் டெல்லர், அமெரிக்க நடிகர்
  • 1988 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை , பாடகி (இ. 2013)
  • 1990 – ஆதி வேங்கடபதி, இந்தியத் தமிழ் இசைக்கலைஞர்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4