காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்!

#SriLanka
Mayoorikka
1 year ago
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால்   தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 குறித்த போராட்டம் இன்று 20.02.2025 கந்தசுவாமி ஆலயம் மூன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போசந்தியை வந்தடைந்து முடிவுற்றது.

 இதன்போது, "காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் முதல் முறையாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்த நிலையில் சோர்வடையாமல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே! 

எமது பிள்ளைகள் எங்கே எமது பிள்ளைகளை ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என எண்ணி காத்திருந்து 8 வருடங்கள் நிறைவடைந்தது ஒன்பதாவது வருடம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எவராலும் எமக்கான தீர்வு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என இன்று எட்டு வருடத்தை பூர்த்தி செய்த இந்நாளில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4