அமெரிக்கா செல்லும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு பயணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈடுபட்டு வருகிறார். அதை அடுத்து அவர் தொடர்ச்சியாக பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறார்.
மறுபுறம், இங்கே பரிசில் ஜனாதிபதி மக்ரோன் பல நாட்டுத்தலைவர்களுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார். திங்கட்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் உக்ரேன் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பின்னர் நேற்று பல ஐரோப்பிய மற்றும் ஐரோப்பா அல்லாத நாட்டுத்தலைவர்களுடன் உரையாடியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியுடன் சந்திப்பு மேற்கொள்ள ஜனாதிபதி மக்ரோன் வாஷிங்டன் நகருக்கு பயணிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



