வங்காளதேசத்தை இலகுவாக வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய முகமது சமி, சவுமியா சர்காரை காலி செய்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மெஹதி ஹசன் மிராஸ், அனுபவ வீரர் முஷ்பிகூர் ரகீமும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர்.
தனது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹிரிடாய், 114 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேச அணி, 49.4 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர்.
சதம் விளாசிய சுப்மன் கில் 101 ரன்களும், கே.என்.ராகுல் 41 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



