தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படுதோல்வி

9வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.
இதில் கராச்சியில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அணியின் தொடக்க வீரர்களாக டோனி ஜி ஜோர்ஜி மற்றும் ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டோனி ஜி ஜோர்ஜி 11 ரன்னில் அவுட் ஆனார்.
இதையடுத்து பவுமா களம் புகுந்தார். பவுமா - ரிக்கல்டன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கல்டன் 103 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 316 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



