சுவிற்சர்லாந்தில் ஒரு பெண்ணும் குழந்தையும் சென்ற கார் மீது மோதிய ரயில்

சுவிட்சர்லாந்தில் ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்ற கார் ஒன்றின் மீது, வேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில், அந்தக் காரில் பயணித்த பெண்ணும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில், ஆளில்லா லெவல் கிராஸிங் ஒன்றைக் கடக்க முயன்றுள்ளார் ஒரு பெண். ஆனால், காரை நடுவழியில் நிறுத்தியுள்ளார் அந்தப் பெண்.
ரயில் நெருங்க, அவர் காரிலிருந்து வேகமாக இறங்கியதுடன், அந்தக் குழந்தையையும் காரிலிருந்து இறக்கி அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.
ஆகவே, அந்த 83 வயது பெண்ணும், அவருடன் காரில் பயணித்த குழந்தையும் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், எதனால் அந்தப் பெண் நடுவழியில் காரை நிறுத்தினார் என்பதை அறிவதற்காக பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



