பிரான்சில் மூடப்பட்டிருந்த ஏழு சூதாட்ட விடுதிகள் மீண்டும் திறப்பு
#France
#Reopen
#Casino
Prasu
1 month ago

கட்டாயத்தின் பேரில் மூடப்பட்டிருந்த ஏழு சூதாட்ட விடுதிகள், இரண்டு மாதங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
பரிசில் உள்ள சூதாட்ட விடுதிகள் கடந்த ஜனவரி 1 ஆம் திகதி (2025) மூடப்பட்டிருந்தன. 2008 ஆம் ஆண்டு ஐரோப்பிய பாரளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட 'சட்டமன்ற கட்டமைப்புச் சட்டத்தின் மூலம் இந்த விடுதிகள் மூடுவதற்கு பணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மார்ச் 1 ஆம் திகதி அவை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
இந்த சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டிருந்ததை அடுத்து, 1,500 பேர் வரை பகுதிநேர வேலை வாய்ப்பை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



