இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான கொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோர், 1984 நவம்பர் 1ஆம் திகதி அன்று கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, இந்த தீர்ப்பை அளித்தார்.
2025,பெப்ரவரி 12ஆம் திகதி அன்று நீதிமன்றம், சஜ்ஜன் குமாரை இந்தக் குற்றத்திற்காக குற்றவாளி என்று தீர்மானித்தது கலவரம் நடந்து 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தீர்ப்பு வந்த நிலையில், குமார் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மற்றொரு வழக்கில், அவர் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு டெல்லியின் ராஜ் நகரில் வசித்த, எஸ். ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் எஸ். தருண்தீப் சிங் ஆகிய இருவரும், 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பானதாகும்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



