சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் பிஸ்தா
இந்தியாவில் ப்ரீ டயாபடீஸ் உள்ளவர்கள் தினமும்
உணவுக்கு முன் இரண்டு முறை 30 கிராம் பிஸ்தா எடுத்துக்கொண்டால் அது பல்வேறு
ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும்
டாக்டர் மோகன்நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவருமான டாக்டர் வி. மோகன்
தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில்
சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் உணவுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்றை
மேற்கொண்டோம்.அந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு 12 வார மருத்துவ
பரிசோதனையில் காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் 30 கிராம் பிஸ்தா
வழங்கப்பட்டது. அப்போது அதை எடுத்துக் கொண்டவர்களுக்கு உணவுக்குப் பிந்தைய
ரத்த குளுக்கோஸ் அளவு குறைந்து இருப்பதும்,
மேலும்,
ட்ரைகிளிசரைடுகளில் 10 சதவீதம், இடுப்பு சுற்றளவு மற்றும் பிற கொழுப்புகள்
குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் நீரிழிவுக்கு முந்தைய
நிலையில் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் குறைந்த அளவே
இருப்பது தெரியவந்துள்ளது.
காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு முன்
30 கிராம் பிஸ்தாவை உட்கொள்வது கிளைசெமிக் அளவை மேம்படுத்துவதோடு
மட்டுமல்லாமல், உணவுகளின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து தன்மைகளையும்
மேம்படுத்துகிறது. பிஸ்தாக்கள் உணவுக் கிளைசெமிக் சுமையைக் குறைக்க
உதவுவதோடு, பெரும்பாலும் உணவுகளில் குறைந்து காணப்படும் மோனோசாச்சுரேட்டட்
கொழுப்பு அமிலங்கள் மற்றும் உணவு நார்ச்சத்து ஆகியவற்றை அதிகரிக்கிறது.
அதே
சமயம் இந்த ஆய்வில் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு
பதிலாக, பிஸ்தா எடுத்துக் கொள்ளும்போது, அது இடுப்பு சுற்றளவையும்,
ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. இதன்மூலம் பிஸ்தாவில், அதிக கலோரிகள்
இல்லை என்பதும் தெளிவாக தெரிய வருகிறது. இருப்பினும், உணவில்
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்கு பதிலாக கூடுதல் பிஸ்தா
எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது.
சிறுநீர்
N-methyl-trans-4-hydroxy-L-proline (MHP) அளவுகள் 60% அதிகரித்தது. இது
பிஸ்தாவை முறையாக எடுத்துக் கொள்வதைக் காட்டுகிறது. மேலும் இதில் உள்ள
ஜீயாக்சாண்டின் போன்ற பாலிபினால் ஆக்சிஜனேற்றிகள், வயது முதிர்வு காரணமாக
ஏற்படும் கண் சம்பந்தமான பிரச்னைகள் மற்றும் பிற உடல்நலக்
குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாத்து பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை
வழங்குகின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்