வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#Rain
Dhushanthini K
2 months ago

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (01) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும். மற்ற பகுதிகளில், மாலை அல்லது இரவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



