பிரான்சில் சிறைச்சாலையில் இருந்த 19 வயது கைதி மரணம்

பிரான்சில் சிறைச்சாலைகளில் நடக்கும் அசம்பாவிதங்கள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் சிறைச்சாலையில் 19 வயது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Bouches-du-Rhône நகரில் உள்ள Aix-Luynes சிறைச்சாலையில் 19 வயதுடைய விசாரணை கைதியொருவர் இறந்துள்ளார் என Aix-en-Provence வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த விசாரணை கைதி, அங்கு ஏற்கனவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 23,25, 26 வயதுள்ள கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் தாக்கப்பட்ட குறித்த நபர் பின்னர் வடக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்த பின்னரே இறந்துள்ளார் என செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



