இன்றைய ராசிபலன் (03.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
இன்றைய ராசிபலன் (03.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவைப்படும். பரணி: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: காலையில் உங்கள் வேலைகள் எளிதாக நடந்தேறும். அதன்பிறகு அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.ரோகிணி: பயணத்தில் தடைகளை சந்திப்பீர். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இன்று தவிர்க்கவும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். திருவாதிரை: முடிவு செய்திருந்த வேலைகளை முடிப்பீர். நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைகள் விலகும். புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர். உறவினர் ஆதரவு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும்.

கடகம்:
புனர்பூசம் 4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வரவுவரும்.பூசம்: வியாபாரம் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம்.

சிம்மம்:
மகம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.உத்திரம் 1: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி காலையில் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

கன்னி:
உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். வாகனப் பயணத்தில் இன்று நிதானம் அவசியம்.சித்திரை 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.

துலாம்:
சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். வெளியூர் பயணம் லாபத்தை ஏற்படுத்தும்.சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்கள் உதவியுடன் செயலில் வெற்றி காண்பீர். விசாகம் 1,2,3: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயன்தரும்.

விருச்சிகம்:
விசாகம் 4: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அனுஷம்: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். கேட்டை: வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உங்கள் திறமை வெளிப்படும்.

தனுசு:
மூலம்: முயற்சியில் எதிர்பாராத தடைகள் தோன்றும். குல தெய்வத்தை வணங்கி செயல்பட வேண்டிய நாள். பூராடம்: வழக்கு வெற்றியாகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர்.உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சிறு சங்கடங்கள் தோன்றும்.

மகரம்:
உத்திராடம் 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். முயற்சியில் கவனம் செலுத்துவது நன்மையாகும். திருவோணம்: வியாபாரம் விருத்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். அவிட்டம் 1,2: பிறரது பேச்சைக் கேட்டு மனதை அலைபாய விடாதீர்கள். அதனால் சங்கடம் தோன்றும்.

கும்பம்:
அவிட்டம் 3,4: எதிர்ப்புகளை சந்தித்தாலும் போராடி வெற்றி பெறுவீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சதயம்: எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மையாகும்.

மீனம்:
பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு செலவில் இருந்த சங்கடம் விலகும். உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: திருமண வயதினருக்கு வரன் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு. பணத்தேவை பூர்த்தியாகும்.

தினம் தவறாமல் பலன்களை பார்வையிட எம் சனலுடன் தொடர்பில் இருங்கள்

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1740953347.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4