பிரான்சில் கார் விற்பனையகத்தில் இருந்த 12 டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புதிய நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க் சர்வதேச அரசியல்வாதியைப் போல பல நாடுகளின் அரசியலிலும் தலையிட்டுவருகிறார்.
அத்துடன், அவர் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துவருகிறார்.
இப்படி தேவையில்லாத விடயங்களில் தலையிட்டு, வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளதால், எலான் மஸ்குக்கு எதிர்ப்பு உருவாகி வருகிறது.
எலான் மஸ்குக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, மக்கள், ஏன் சில நாடுகளே, அவரது நிறுவனத் தயாரிப்பான டெஸ்லா கார்களை புறக்கணிக்கத் துவங்கியுள்ளன.
இந்நிலையில்,பிரான்சிலுள்ள Toulouse நகரில் அமைந்துள்ள கார் விற்பனையகம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 12 டெஸ்லா கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தும், எட்டு கார்கள் முழுமையாக நாசமடைந்துவிட்டன, நான்கு கார்கள் மோசமாக சேதமடைந்துள்ளன.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



