இன்றைய ராசிபலன் (05.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: உற்சாகமான நாள். உங்கள்
செயல்கள் வெற்றியாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். பரணி:
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு
உயரும். கார்த்திகை 1: மதியம் வரை மனதில் குழப்பம் இருந்தாலும் அதன்பின்
சரியாகும். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: திறமை வெளிப்படும் நாள். மதியம்வரை செலவுகள் இருப்பினும் அதன்பின்
வரவு அதிகரிக்கும். ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் அடைவீர்கள்.
இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: குழப்பம்
தவிர்த்து செயல்படுவதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். அலுவலகத்தில்
செல்வாக்கு உயரும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: உழைப்பால்
உயர்வு காண வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் செலவு அதிகரிக்கும்.
திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் ஏற்பட்ட
பிரச்னைகள் விலகும். புனர்பூசம் 1,2,3: அவசர வேலைகள் வந்து உங்களை
அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும்.
கடகம்:
புனர்பூசம்
4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
எதிர்பார்த்த லாபம் வரும். பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட
பிரச்சினைகள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். ஆயில்யம்: வியாபாரம்
முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம்:
மகம்:
வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். செயல்களில் இருந்த தடைகள் விலகும்.
பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர். பொருளாதார
நிலை உயரும்.உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அரசுவழி வேலைகள்
நடந்தேறும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: மதியம்வரை செயல்களில்
குழப்பம், வருமானத்தில் தடைகள் இருந்தாலும் அதன்பின் நிலைமை சீராகும்.
அஸ்தம்: உங்கள் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள்
முடிவிற்கு வரும். சித்திரை 1,2: கோயில் வழிபாடு உங்கள் கவலைகளை நீக்கும்.
தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.
துலாம்:
சித்திரை 3,4:
மதியத்திற்குமேல் உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடைகள் உண்டாகும்.
கவனமுடன் செயல்படவும். சுவாதி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
பொருளாதார நெருக்கடி விலகும்.விசாகம் 1,2,3: செயல்களில் கவனம் வேண்டும்.
யாரிடமும் இன்று வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம்:
விசாகம்
4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உறவினர் ஆதரவால் உங்கள் வேலைகள்
நடந்தேறும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வழக்கு
விவகாரம் சாதகமாகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில்
ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
தனுசு:
மூலம்:
வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம்
நீங்கும். பூராடம்: தெய்வ பலத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள்
செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.
மதியத்திற்குமேல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். பொருளாதார நெருக்கடியால் வியாபார
முயற்சி தள்ளிப்போகும். திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு
தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அவிட்டம் 1,2:
செயலில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். கவனமாக செயல்படுவது
நல்லது.
கும்பம்:
அவிட்டம் 3,4: நெருக்கடியான நாள். மதியம்வரை
இருந்த ஆதாயநிலை அதன்பிறகு மாறும். சதயம்: உங்கள் திறமை வெளிப்படும்.
எதிர்பார்த்த வரவு வரும். செயல்களில் ஆதாயம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3:
விருப்பங்களால் விவகாரம் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில்
மனம் செல்லும்.
மீனம்:
பூரட்டாதி 4: மதியம்வரை சில தடைகளை
சந்தித்தாலும் அதன்பிறகு உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.உத்திரட்டாதி:
நினைப்பது நடந்தேறும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.
ரேவதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர்கள். நட்பு வட்டம்
விரிவடையும்.
தினம் தவறாமல் பலன்களை பார்வையிட எம் சனலுடன் தொடர்பில் இருங்கள்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



