இன்றைய ராசிபலன் (06.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: வரவால் வளம் காணும் நாள்.
முன்னோரை வணங்கி உங்கள் பணிகளைத் தொடர்வீர்கள். பரணி: பணப்புழக்கம் கூடும்.
தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தினர்
விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4:
வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை
தீரும். ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலை நடந்தேறும்.
நட்பு வட்டம் விரிவடையும். மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட
பிரச்னைகள் முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: போராடி வெற்றி காணும் நாள். செலவு அதிகரித்தாலும் உங்களது வேலைகள்
வெற்றியாகும். திருவாதிரை: உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர்.
அலைச்சல் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: கடன் கொடுப்பதையும் வாங்குவதையும்
தவிருங்கள். வாகன பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
கடகம்:
புனர்பூசம்
4: வருமானத்திற்குரிய நாள். தொழிலில் இருந்த தடை நீங்கும். செல்வாக்கு
உயரும். பூசம்: தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில்
எதிர்பார்த்த லாபம் வரும்.ஆயில்யம்: பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி
வெற்றியாகும். பழைய முதலீட்டில் இருந்து பணம் வரும்.
சிம்மம்:
மகம்:
சகபணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விற்பனையில் எதிர்பார்த்த
லாபம் கிடைக்கும்.பூரம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர். அரசு வழியில்
மேற்கொண்ட வேலையில் ஆதாயம் உண்டாகும்.உத்திரம் 1: புதிய முதலீடுகளை இன்று
தவிர்க்கவும். சிறு வியாபாரிகள் கவனமாக செயல்படுவது நன்மையாகும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும்.
அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த
நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
துலாம்:
சித்திரை
3,4: விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால்
அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். சுவாதி: பயணத்தில் சில பிரச்னைகளை
சந்திக்க நேரும். பேச்சில் கவனம் அவசியம். விசாகம் 1,2,3: உங்கள் செயலில்
நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.
விருச்சிகம்:
விசாகம்
4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர்.
அனுஷம்: குடும்பத்தினர் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்
துணையின் ஆலோசனை நன்மை தரும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில்
ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்.
தனுசு:
மூலம்: எதிர்ப்புகள்
விலகும் நாள். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வழக்கு சாதகமாகும்.
பூராடம்: இழுபறியாக இருந்த பிரச்னை தீரும். மற்றவரால் முடியாத வேலையை
சாதாரணமாக முடிப்பீர்.உத்திராடம் 1: உங்கள் திறமை வெளிப்படும்.
வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: பெரியோர் ஆதரவால் பெருமைக் காணும் நாள். குடும்பத் தேவைகளை
நிறைவேற்றுவீர். திருவோணம்: குல தெய்வத்தை வழிபட்டு செயல்படுவதால்,
இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: புதிய முயற்சி
வெற்றியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்:
அவிட்டம்
3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தாய்வழி உறவினரால் ஆதாயம்
காண்பீர்.சதயம்: மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நினைப்தை
செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: தேவைகள் பூர்த்தியாகும்.
வருமானத்தில் உங்கள் கவனம் செல்லும்.
மீனம்:
பூரட்டாதி 4:
முன்னேற்றமான நாள். புதிய முயற்சி வெற்றியாகும். ஆதாயம்
அதிகரிக்கும்.உத்திரட்டாதி: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். பிரிந்து
சென்ற நண்பர்கள் தேடிவருவர். ரேவதி: முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில்
ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
தினம் தவறாமல் பலன்களை பார்வையிட எம் சனலுடன் தொடர்பில் இருங்கள்
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




