உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு இடமாற்றம்!
#SriLanka
Mayoorikka
2 months ago

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மேற்படி இடமாற்றங்களுடன் சிலருக்கு தற்போதைய பதவிகளுடன் மேலதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



