பிரான்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் 200 கிலோ கொக்கைன் பறிமுதல்

பிரான்ஸ் சர்வதேச விமான நிலையம் சாள்-து-கோல் ஊடாக எடுத்துவரப்பட 200 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. lanka4.com
சந்தேகத்துக்கிடமான பயணிகள் சிலர் சுங்கவரித்துறையினரால் சோதனையிடப்பட்டனர். ஆறு பேர் கொண்ட ஒன்று 12 சூட்கேஸ் பெட்டிகளில் கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. lanka4.com
மொத்தமாக அவை 200 கிலோ இருந்ததாகவும் அவை பரிசின் புறநகர் பகுதி ஒன்றுக்கு கொண்டுசெல்லப்பட இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. lanka4.com
பிரான்சுக்கு கொக்கைன் பிரதானமாக கொலம்பியா, பெரு, பொலிவியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் கொண்டுவரப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 53.5 தொன் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



