இன்றைய ராசிபலன் (10.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்:
அசுவினி: உழைப்பால் உயர்வு காணும்
நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை முடியும். முயற்சியில் கவனம்
தேவை.பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம்
செல்வீர்கள்.கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர்.
வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி
அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். எதிர்பார்ப்பு தள்ளிப்
போகும்.ரோகிணி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்துவீர்கள். நேற்று
நிறைவேறாமல் இருந்த வேலை இன்று முடியும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு
செயல்படுவீர். உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தில் சுப செயல்
நடக்க அறிகுறி தெரியும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: கவனமும்
விழிப்புணர்வும் இன்று உங்களை வெற்றியாக்கும். வருமானம் திருப்தி தரும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: காலநிலை உணர்ந்து
செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். வியாபாரத்தில் லாபம்
உண்டாகும். வீட்டிற்குத் தேவையாதை வாங்குவீர்.புனர்பூசம் 1,2,3: நேற்று
எதிர்பார்த்த தகவல் வரும். மனக்குழப்பம் விலகும். உங்கள் எண்ணம்
நிறைவேறும்.
கடகம்:
புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும்
நாள். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
முடிவாக செயலில் சரியான முடிவெடுப்பீர்.பூசம்: முயற்சியால் முன்னேற்றம்
காண்பீர். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது
நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.ஆயில்யம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
சிந்தித்து செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அடைவீர்.
இழுபறியாக இருந்த வேலை முடியும்.
சிம்மம்:
மகம்: கவனமாக செயல்பட
வேண்டிய நாள். திடீர் செலவினால் நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக
சொன்னவர்களால் ஏமாற்றமே மிஞ்சும்.பூரம்: வழக்கமான செயல் இன்று லாபத்தை
உண்டாகும். நேர்மையாக இருந்தாலும் பிறரின் விமர்சனத்திற்கு
ஆளாவீர்கள்.உத்திரம் 1: வரவு செலவில் கவனமாக இருப்பது நல்லது. அலைச்சலும்
செலவும் அதிகரித்தாலும் இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நிறைவேற்றிக்
கொள்வீர்கள். பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.அஸ்தம்: நெருக்கடி
நீங்கி நன்மைகள் காண்பீர். வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம்
தீரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.சித்திரை 1,2: புதிய
நட்பும் அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிர்த்து செயல்பட்டவர்கள்
பலமிழப்பர். வியாபாரம் முன்னேற்றமடையும்.
துலாம்:
சித்திரை 3,4:
வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விற்பனையில் இருந்த தடை
விலகும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.சுவாதி: மற்றவரை
அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். செயல்களில் இருந்த தடை விலகும்.
முயற்சி வெற்றியாகும். தொழிலில் லாபம் கூடும்.விசாகம் 1,2,3: நேற்று
எதிர்பார்த்த தகவல் வரும். பொருளாதார நிலை உயரும். உங்களுக்கு நண்பர்கள்
துணை நிற்பர்.
விருச்சிகம்:
விசாகம் 4: உற்சாகமாக செயல்பட்டு
வெற்றியடையும் நாள்.தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்ப்பு
நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி
நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் திறமை வெளிப்படும்.கேட்டை: உடன்
பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் விருப்பம் பலிதமாகும்.
திறமையாக செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர்.
தனுசு:
மூலம்:
கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறியும்
எதிர்பார்ப்பில் தடையும் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்:
தேவையற்ற பிரச்னை தேடிவரும். இன்று ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை.
வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர்.உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச்
செல்வது நல்லது. செலவு செய்தும் முயற்சி இழுபறியாகும். நினைப்பதும்
நடப்பதும் வேறாக இருக்கும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.
மகரம்:
உத்திராடம்
2,3,4: மகிழ்ச்சியான நாள். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள்
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தேவைக்கேற்ப பணம் வரும்.திருவோணம்:
இழுபறியாக இருந்த வேலை முடியும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். ஒரு
சிலர் ஆலோசனையால் அரசுவழி வேலை சாதகமாகும்.அவிட்டம் 1,2: வெளியூர் பயணம்
லாபம் தரும். விமர்சனங்களை உங்கள் காதில் போட்டுக் கொள்ளாமல்
செயல்படுவீர்கள். நன்மை அதிகரிக்கும் நாள்.
கும்பம்:
அவிட்டம்
3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த
லாபத்தைக் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.சதயம்: அதிர்ஷ்ட
வாய்ப்பு தேடிவரும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர்.
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு சாதகமாகும்.பூரட்டாதி
1,2,3: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் ஈடுபடும்
வேலையில் லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும்.
மீனம்:
பூரட்டாதி
4: நினைப்பது நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
எதிர்பார்த்த பணம் வரும். பிரிந்து சென்ற உறவினர்கள்
தேடிவருவர்.உத்திரட்டாதி: கடன் பிரச்னை தீரும். மனக்குழப்பம் விலகும்.
பிள்ளைகள் பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலகத்தில் வேலைபளு கூடும்.ரேவதி:
சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். தொழில்
முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



