செவ்வந்தி தப்பிச் செல்ல வாய்ப்பில்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

#SriLanka
Mayoorikka
1 year ago
செவ்வந்தி தப்பிச் செல்ல வாய்ப்பில்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பாதாள உலகக் கும்பலை சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

 செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகளை குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 சம்பவ தினமான பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சில மணி நேரத்திற்குள்ளே செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

 புலனாய்வுக் குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களின் போது, ​​பல்வேறு வதந்திகள் பரப்பி விசாரணைகளை திசை திருப்புவதற்காக சிலர் இதுபோன்ற தகவல்களை வெளியிடுகின்றனர். செவ்வந்தியை கைது செய்வதற்கு புலனாய்வுக் குழுக்கள் தீவிரமான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1741548940.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4