சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழீழத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவித்தல் நிகழ்வு

தலைவர் பிரபாகரனின் சாவை அறிவிக்கும் நிகழ்வு நேற்று சுவிஸில்
இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்
பணிமனையின் இணைப்பாளர் இ .பிரசாத. என்பவரினால் இந்த அறி விப்பை வெளியிடும்
காணொலிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
அந்த
அறிவிப்பில்:-உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான
தமிழீழத் தேசியத் தலை வர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதி
வரை கொண்ட கொள்கையில் உறுதிதளராது, முப்பத்தாறு ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு
அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார்.
சிறிலங்கா
அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும்
உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின்
சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு, அனைத்து தடை களையும் தனது
பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத் தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர்
திகழ்கின்றார்.
தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி,
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி, தான்
வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தை யும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று
உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவளையும்
நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது
தேசியத்தலைவர் அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வீரச்சாவைத்
தழுவிக்கொண்டார் என்பதனை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத்தருகிறது.
தமிழீழத்
தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி, நெஞ்சைப் பிளக்கும்
இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போரா டிய
போராளிகளுக்கும், ஒப்பற்ற தேசியத் தலைமை யாக தமது நெஞ்சங்களில்
சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு
வெளிப் படுத்திக் கொள்ளும் அதேவேளை, எமது வீரவணக்கத்தை யும் தெரிவித்துக்
கொள்கிறோம்.
காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து
கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த
நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து,
தமி ழினத்தின் அதிஉச்ச வீர அடையாளமாக தமிழீழத் தேசி யத் தலைவர் அவர்கள்
திகழ்கின்றார்.
வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு,
எதிரியாலும் போற் றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ
ஒழுக்கத்துடனும் தமிழர் மனங்களில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால்,
செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும்
நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார்.
எமது அன்பிற்குரிய தாய்த்தமிழ் உறவுகளே!
தமிழினத்தின்
கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப்
புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதி தளராது
போராடிய எமது தேசியத் தலைவர் அவர்களும் மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக்
கொண்டார்.
தமி ழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எமது
தேசியத் தலைவருக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு
நெஞ்சங்களில் இருத்தி, தமிழீ ழப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக
எமது இதயக் கோயில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடிய வராக்க வேண்டியது
ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும்.
ஆகவே
வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத் தலைவருக்கு, தலைவரின்
வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர், தாயக மற்றும்
தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம்,
தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத் தும்
அதேவேளை, அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப் பிய நாடொன்றிலும் 2025 ஆம் ஆண்டு
நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.
எங்கள்
பெருந் தலைவர் அவர்களால் கட்டமைத்து வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில்
தரப்பட்டுள்ள தமி ழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே
கட்டுக் கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறி வரும் பூகோள அரசியல்
மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி
இலட்சியத்தை அடை வோமென தமிழீழத் தேசியத் தலைவர் மீதும் மாவீரர் கள் மீதும்
உறுதியெடுத்துக்கொள்கிறோம் என்று உள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



