சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம் - மூவர் பலி!
#SriLanka
#Switzerland
#world_news
Dhushanthini K
2 hours ago

டென்மார்க்கை நோக்கிச் சென்ற ஒரு சிறிய விமானம் தென்கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக போலீசார் இன்று (18.03) தெரிவித்தனர்.
எக்ஸ்ட்ரா EA-400 ப்ரொப்பல்லர் விமானம் திங்கள்கிழமை மாலை 5:20 மணிக்கு சமேடன் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டதாக கிராபுவென்டன் மாகாணத்தில் (மாநிலம்) உள்ள போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
விமானம் புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு லா பன்ட் சாமுஸ்-ச் கிராமத்தின் விளிம்பில் விபத்துக்குள்ளாகி எரிந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் முழுமையாக அடையாளம் காணவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



