மகாராஷ்டிராவில் உள்ள நகரம் ஒன்றில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!
#India
#SriLanka
#Curfew
Dhushanthini K
1 week ago

இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நகரத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரியதால் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் நகரின் மஹால் பகுதியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், கற்கள் வீசி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அமைதியைக் காக்குமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலம் வன்முறைகள் விரிவடைவதை தடுக்கும் நோக்கில் மேற்படி ஊரடங்கு அமுற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



